பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மகளிர் விவகார அமைச்சரினால் விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது....
வடமாகாண சபையின் 2017ம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் அவர்களால் இருபத்தையாயிரம் ரூபா (25000.00) பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மீசாலை வடக்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட சீமா விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண விளையாட்டு திணைக்கள வளாகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கௌரவ அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் கலந்து கொண்டு குறித்த கழக அங்கத்தவர்களிடம் குறித்த பொருட்களை வழங்கி சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் விளையாட்டுத்திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் சீமா விளையாட்டுக் கழக அங்கத்தவர்கள் கலந்து சிறப்பித்தனர்.