யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலுள்ள நகைக் கடை ஒன்றில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிங்கள பெண்ணுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கடந்த மாதம் 8ஆம் திகதி குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார். இவரை நேற்று முன்தினம் யாழ். நீதிவான் நீதிமன்றில் முன்லைப்படுத்திய போது அவருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் சிங்களப் பெண் ஒருவர் கஸ்தூரியார் வீதியிலுள்ள நகைக் கடை ஒன்றுக்கு சென்று வளையல் வாங்குவதாக கூறி, சில வளையல்களை பார்வையிட்டுள்ளார்.
பின்னர் வங்கியிலிருந்து பணத்தை எடுத்து வருவதாக கூறிச் சென்ற குறித்த பெண் மீண்டும் கடைக்கு செல்லவில்லை.
இந்த நிலையில் வளையல்களை சோதனையிட்ட கடை உரிமையாளர் அதில் 2 வளையல்கள் காணாமல் போனதை அறிந்து கொண்டு, கடையிலிருந்த சி.சி.டி.வி கெமராவை சோதனையிட்டுள்ளார்.
இதில் குறித்த பெண் வளையல்களை மிகவும் சூட்சுமமான முறையில் கொள்ளையடித்துச் சென்றுள்ளதை அவதானித்து, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர் திருடிய வளையல்களின் பெறுமதி 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.