Friday, May 4, 2018

How Lanka

மஹிந்தவை காப்பாற்றிய மைத்திரி - சரத்பொன்சேகா கடும் குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கடந்த கால அரசாங்கத்தில் பாரிய மோசடிகளில் ஈடுப்பட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடையாக உள்ளார்.

இதனாலேயே கடந்த தேர்தலில் தேசிய அரசாங்கத்தினை மக்கள் புறக்கணித்தனர் என பீல்ட மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்தீரமற்ற நிலைமைக்கு நாட்டு தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும். தேசிய அரசாங்கம் 2015ஆம் ஆண்டு முன்வைத்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.

அவ்வாறு இல்லாவிடின் தேசிய அரசாங்கம் 2020ஆம் ஆண்டு பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்.

தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்ற 10பில்லியன் பினைமுறி மோசடியினை வைத்துக் கொண்டு கடந்த காலத்தில் இடம்பெற்ற பல ஊழல் மோடிகளை எதிரணியினர் மூடி மறைக்கின்றனர்.

கடந்த மூன்று வருட காலமாக தேசிய அரசாங்கத்தில் பல குறைப்பாடுகள் காணப்படுகின்றது. அரசாங்கமும் குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தார் தேசிய நிதியினை பல வழிமுறைகளில் மோசடி செய்தனர் இதற்கான ஆதாரங்களும் சட்டப்பூர்வமாக உறுதியாக்கப்பட்டுள்ளது. நாட்டில் பொது சாதாரண சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானதாகவே காணப்பட வேண்டும்.

ஆனால் முன்னாள் மஹிந்த மற்றும் அவரது குடும்பத்தாரின் விவகாரத்திலும் சட்டம் தொடர்ந்தும் மந்மகரமாகவே செயற்பட்டு வருகின்றது. ஆனால் இவர்களுக்கு எதிராக அனைத்து சாட்சியங்களும் உறுதியாகவே காணப்படுகின்றது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமைத்துவத்தில் உள்ள தேசிய அரசாங்கம் தற்போது காணப்படுகின்ற குறைப்பாடுகளை 2020ஆம் ஆண்டுக்குள் விரைவாக நிவர்த்தி செய்ய வேண்டும் அவ்வாறு இல்லாவிடின் மீண்டும் குடும்ப ஆட்சி தோற்றம் பெறும்.

பாராளுமன்ற தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமரானால் 18ஆவது அரசியல் திருத்தத்தினை தனக்கு சாதகமாக கொண்டுவந்நதை போன்று 19ஆவது அரசியல் திருத்தத்தினை இரத்து செய்து தமக்கு சாதகமான முறையில் புதிய அரசியல் திருத்தத்தினை ஏற்படுத்தி மீண்டும் ஜனாதிபதியாகி விடுவார்.

மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் நாடு பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். தற்போது சுயாதீனமாக செயற்படும் ஆனைக்குழுக்கள் தமது சுயாதீனமற்றுபோய் குடும்ப ஆட்சிக்கு உட்படுத்தப்படும்.

அதன் பின்னர் தொடர்ச்சியான அரசியல் பழிவாங்கள்கள் மாத்திரமே இடம்பெறும் என்பது மாத்திரம் நிச்சயிக்கப்பட்ட பலரது எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.

தற்போது நாட்டில் காணப்படுகின்ற ஜனநாயகம் மீண்டும் இருண்ட யுகத்திற்கு செல்லாமல் இருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக முன்வைத்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.

கடந்த காலத்தின் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்கும் விடயத்தில் அரசாங்கம் தொடர்ந்தும் காலதாமதத்தினை ஏற்படுத்துமாயின் அது தேசிய அரசாங்கத்திற்கு மறுமுனையில் பாதிப்பினை ஏற்படுத்தும்.

நாட்டு மக்களும் தற்போதைய அரசியல் குறைப்பாடுகளை காரணம்காட்டி தீர்மானங்களை மேற்கொள்ளாமல் எதிர்கால நலன் மற்றும் கடந்த கால அரசியல் நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.