கடந்த நாட்களில் வெசாக் கொண்டாட்டத்தினை முன்னிட்டு கொழும்பு நகரம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.
புறநகர் பகுதிகளில் இருந்தும் பெருந்தொகையான மக்கள் கொழும்பு நகரை பார்வையிட இரவு வேளையில் வருகை தந்திருந்தனர்.
கொழும்பு காலி முகத்திடலில் இரவு வேளையில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வுகளிலும் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர்.
இவர்களினால் கொழும்பு நகரம் அசிங்கமாக காட்சியளிக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
வெசாக் காலப்பகுதியில் இரவு 12 மணி வரை காலி கடற்கரையில் நிறைந்து காணப்படுகிறது. அந்தப் பகுதியில் தற்காலிக கடைகள் அமைத்து பலர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் இந்த பகுதியில் சேறும் குப்பைகளை கொட்டுவதற்கு உரிய இடம் ஒன்று இல்லை என கூறப்படுகின்றது.
இதனால் கண்ட இடங்களில் பொது மக்கள் குப்பை போடுகின்றமையினால் கொழும்பின் அழகு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் கொழும்பு நகர சபைக்கு புதிதாக தெரிவாகியுள்ள ரோஷி சேனாநாயக்க ஆராய்ந்து பார்ப்பதில்லையா என பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.