சென்னை அணிக்கெதிரான போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரின் இன்றைய 33-வது லீக் போட்டியில் டோனி தலைமையிலான கொல்கத்தா அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன் படி சென்னை அணிக்கு துவக்க வீரர்களாக வாட்சன்-டூபிலிசிஸ் களமிறங்கினர்.
ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இவர்களின் டூபிலிசிஸ் 27 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற, அடுத்து வந்த சுரேஷ் ரெய்னாவுடன், வாட்சன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
வாட்சனும் 36, ரெய்னா 31., ராயுடு 21 என வெளியேற சென்னை அணியின் ரன் விகிதம் குறையத் துவங்கியது. இருப்பினும் கடைசி கட்டத்தில் அணியின் தலைவரான டோனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த சென்னை அணி 20 ஓவர் முடிவ்ல் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்கள் எடுத்தது.
சென்னை அணி சார்பில் டோனி 25 பந்துகளில் 43 ஓட்டங்களும், வாட்சன் 25 பந்துகளில் 36 ஓட்டங்களும் எடுத்தனர். கொல்கத்தா அணி சார்பில் சுனின் நரைன், பியூஸ் சாவ்லா தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 178 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு துவக்க வீரர்களாக கிறிஸ் லின், சுனில் நரைன் களமிறங்கினர்.
கிறிஸ் லின் 12 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், அடுத்து வந்த ராபின் உத்தப்பா 6 ஓட்டங்களிலும், மற்றொரு துவக்க வீரரான சுனில் நரைன் 12 ஓட்டங்களிலும் வெளியேறியதால் கொல்கத்தா அணி தடுமாறியது.
இருப்பினும் சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் சென்னை அணியின் பந்து வீச்சை சிதறிடித்தார். இவருக்கு இணையாக சுப்மன் கில்லும் அதிரடி ஆட்டத்தை காட்டியதால், தடுமாறி வந்த கொல்கத்தா அணி வெற்றியை நோக்கி நகர்ந்தது.
இதனால் கொல்கத்தா அணி இரண்டு ஓவர் மீதமிருக்கையிலே அதாவது 17.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி கட்டத்தில் வந்து பினிசர் மேனாக மாறிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 18 பந்தில் 45 ஓட்டங்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரிகள் 1 சிக்ஸர் அடங்கும், இவருக்கு இணையாக ஆடிய சுப்மன் கில் 36 பந்தில் 57 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்த தோல்வியின் மூலம் சென்னை அணி முதலிடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதே சமயம் கொல்கத்தா அணி 10 புள்ளிகளுடன் முன்றாம் இடத்தை பிடித்துள்ளது.