Saturday, June 2, 2018

How Lanka

நுகர்வுக்கு உதவாத 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டின் மீன்கள் மீட்பு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கையின் ஊடாக நுகர்வுக்கு உதவாத 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டின் மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த தகவலை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளில் 1800 பேர் ஈடுபட்டுள்ளனர்.

25 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

கண்டி, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் நுகர்வுக்கு உதவாத டின் மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 74 கொள்கலன்களில் இருந்து தரமற்ற டின் மீன்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், இவை அனைத்தையும் மீள அனுப்பி வைக்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தாக குறிப்பிட்டுள்ளார்.