வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மேசைப்பந்தாட்டத் தொடரில் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி கிண்ணம் வென்றது
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் இடம்பெற்ற இந்த இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணி மோதியது.
முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் யாழ்ப்பாண ம் மத்திய கல்லூரி அணியின் சார்பில் சியாம்ராஜ், அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணியின் சார்பில் விஜயராஜ் இருவரும் மோதினர்.
11:08, 11:07, 11:02 என்ற புள்ளி களின் அடிப்படையில் முதல் மூன்று செற்களையும் கைப்பற்றினார் சியாம்ராஜ்.
இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் சார்பில் சதுர்சன், அராலி மகா வித்தியாலய அணியின் சார்பில் டிலக்சன் இருவரும் மோதினார்கள்.
11:7, 12:10, 11:2 என்ற புள்ளிகளின் அடிப் படையில் சதுர்சன் வெற்றிபெற்றார்.
மூன்றாவது ஒற்றையர் ஆட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் சார்பில் சஞ்சேய், அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணியின் சார்பில் யதுசன் இருவரும் மோதி னர்.
11:02, 11:18, 11:05 என்ற புள்ளிகளின் அடிப்படையில் சஞ்சேய் வெற்றிபெற்றார்.
இதையடுத்து 3:0 என்ற செற் கணக்கில் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி.