வட மாகாணத்தில் பாதுகாப்பற்ற வகையில் மின்சார கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள கேபிள் இணைப்புகளை அகற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் பொது மக்கள் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் மின்சார கம்பங்களினூடாக கேபிள் வயர்கள் பொருத்தப்பட்டுள்ளமையால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
பாதுகாப்பற்ற வகையில் மின்கம்பிகளுக்கு கீழாக கேபிள் இணைப்புகள் பொருத்தப்பட்டுள்ளமையால், கேபிள் வயர்களூடாக மின்சாரம் கடத்தப்பட்டு யாழ். மாவட்டத்தில் 7 உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த விடயம் குறித்து மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவிக்கையில்,
எதுவித அனுமதியும் பெறப்படாது மின் கம்பங்களினூடாக கேபிள் இணைப்புகள் பொருத்தப்படுகின்றன.
கேபிள் வயர்கள் மின்சார கம்பங்களினூடாக இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
எனினும், அந்த குழுவினரால் இதுவரை அறிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை. எப்போது அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என கூற முடியாது.
எவ்வாறாயினும், அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னரே உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.