Wednesday, July 4, 2018

How Lanka

நான் அவ்வாறு கூறவே இல்லை - இது ஊடகங்களின் வேலை - விஜயகலா

கடந்த இரண்டு நாட்களாக, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட விடுதலைப் புலிகள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வொன்றில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், “விடுதலைப் புலிகளிள் மீள்வருகை” குறித்து பேசியிருந்தார்.

இது தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதற்கு கண்டம் வெளியிட்டு வருகின்றனர். ஆளும் மற்றும் எதிர்க் கட்சி உறுப்பினர்களும் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக பேசி வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட விடுதலைப் புலிகள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வொன்றில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், “விடுதலைப் புலிகளிள் மீள்வருகை” குறித்து பேசியிருந்தார்.

இது தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதற்கு கண்டம் வெளியிட்டு வருகின்றனர். ஆளும் மற்றும் எதிர்க் கட்சி உறுப்பினர்களும் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக பேசி வருகின்றனர்.


இந்நிலையில், “விடுதலைப் புலிகளுக்கு மீளவும் உயிர்ப்பு கொடுக்க வேண்டும் என தான் பேசவில்லை” எனவும், தனக்கு நாக்கு தடுமாறி விட்டதாகவும் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ரஞ்சன் ராமநாயக்க குறித்த தொலைபேசி உரையாடலை வெளியிட்டுள்ளார்.

அதில்,

ரஞ்சன் ராமநாயக்க: விடுதலைப் புலிகள் பற்றி நீங்கள் என்ன கூறினீர்கள்?

விஜயகலா மகேஸ்வரன்: யார் கூறியது?

ரஞ்சன் ராமநாயக்க: ஏன், நீங்கள் கூறியுள்ளீர்கள். அது தான் எல்லா நாளிதழ்களிலும் உள்ளன.

விஜயகலா மகேஸ்வரன்: ஐயோ, யார் அந்தப் பொய்யைச் சொன்னது. அந்தக் காலகட்டத்தில் நாங்கள் எந்தப் பிரச்சினையும் இன்றி இருந்தோம் என்றே நான் கூறினேன்.

ரஞ்சன் ராமநாயக்க: பாடசாலைச் சிறுமி உறவினர்களால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டாரா?

விஜயகலா மகேஸ்வரன்:
சகோதரனுக்கும், மாமாவுக்கு எந்த தொடர்புமில்லை. அது போதைப்பொருள் பாவனையாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. தெற்கைப் போல, இங்கு உறவு முறையில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ரஞ்சன் ராமநாயக்க: காணிகளைத் திரும்பக் கொடுத்தமைக்கு சிறிலங்கா அதிபருக்கு நீங்கள் நன்றி தெரிவித்திருந்தீர்கள்.

விஜயகலா மகேஸ்வரன்: அவர் தனது கட்சியை வளர்க்கவே யாழ்ப்பாணம் வந்தார். அவரது வெற்றிக்கு நாங்கள் கடுமையாக உழைத்திருக்கிறோம்.

தேர்தலில் தான் ஒரு மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மகிந்த ராஜபக்ச என்னிடம் கூறியிருந்தார். ஒரு பில்லியன் ரூபா பணமும், அமைச்சர் பதவியும் தருவதாக எனக்குக் கூறினார். ஆனாலும் அவரை ஆதரிக்கவில்லை.

ரஞ்சன் ராமநாயக்க:
உங்களின் கணவன் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டாரா?

விஜயகலா மகேஸ்வரன்: இல்லை. என்ன முட்டாள்தனம். எல்லாப் பிரச்சினைகளுக்கும் சந்திரிகாவும் மகிந்தவும் தான் காரணம்.

ரஞ்சன் ராமநாயக்க:
இந்தப் பிரச்சினைக்கான உங்களின் தீர்வு தவறானது.

விஜயகலா மகேஸ்வரன்: விடுதலைப் புலிகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று நான் கூறவில்லை. அந்தக் காலத்தில் நாங்கள் அமைதியாக வாழ்ந்தோம். உற்சாகத்தில், நான் தவறுதலாக கூறி விட்டேன் . யாரும் திரும்பி வரமாட்டார்கள்.

ரஞ்சன் ராமநாயக்க:
விடுதலைப் புலிகள் திரும்பி வரவேண்டும் என்று கூறாதீர்கள். அது நல்லதல்ல.

விஜயகலா மகேஸ்வரன்: இல்லை, இல்லை ரஞ்சன், இதனை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடிப்பதற்கான ஊடகங்களின் வேலை.

ரஞ்சன் ராமநாயக்க:
அப்படியான அறிக்கைகளை வெளியிட வேண்டாம். அது அரசாங்கத்துக்கு நல்லதல்ல.

விஜயகலா மகேஸ்வரன்:
இல்லை, ரஞ்சன் விடுதலைப் புலிகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று நான் கூறவில்லை.

என்று அந்த உரையாடல் அமைந்துள்ளது.