வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மல்ரி பிளக் (நீள் மின் இணைப்பு பொருத்தி) ஒன்றை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
வவுனியாவைச் சேர்ந்த கணேஸ்வரன் என்ற 28 வயதுடைய இயந்திரவியல் பொறியியலாளரான இளைஞனே மேற்படி கின்னஸ் சாதனையை புரிந்துள்ளார். அந்தவகையில் 2.914 மீற்றர் நீளமும், 0.074 மீற்றர் அகலமும், 0.050 மீற்றர் உயரமும் கொண்ட நீள் மின் இணைப்பு பொருத்தியை தயாரித்து கின்னஸ் சாதனையாளர் என்ற பட்டத்தை தனதாக்கி கொண்டுள்ளார்.
க.கணேஸ்வரன் 28-02-2018 அன்று வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்லூரியின் அதிபர் மற்றும் மாணவர்கள், ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கின்னஸ் சாதனை முயற்சியை பதிவு செய்திருந்தார் என்பதுடன் நில அளவை திணைக்களத்தை சேர்ந்த அரச நில அளவையாளர் பி.நிமலன் மற்றும் மின் பொறியியலாளர் கெ.ராஜ்குமார் ஆகியோரினால் மேற்பார்வை செய்யப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கின்னஸ் சாதனைக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் கின்னஸ் சாதனை அமைப்பினால் உத்தியோகபூர்வமாக க.கணேஸ்வரனின் உலகசாதனை அறிவிக்கப்பட்டு அதற்குரிய சான்றிதழும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் தொழில்நுட்ப துறையில் தனிநபர் ஒருவர் செய்து கொண்ட முதலாவது சாதனையாகவும், வவுனியாவில் இருந்து பதிவு செய்யப்பட்ட முதலாவது கிண்னஸ் சாதனையாகவும் இது பதிவாகியுள்ளது.