Thursday, July 5, 2018

How Lanka

ஆனந்த சுதாகரனின் விடுதலை சட்ட அணுகுமுறைகளின் அடிப்படையில் இடம்பெறும் - ஜனாதிபதி செயலகம்

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுவிப்பதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் சட்ட அணுகுமுறைகளின் அடிப்படையில் இடம்பெறுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. கவனயீர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில், அவரின் விடுதலையை வலியுறுத்தி பொதுமக்களின் கையெழுத்துக்கள் அடங்கிய மனுவொன்று வட மாகாண கல்வியமைச்சர் க.சர்வேஸ்வரனினால் ஜனாதிபதியிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் லக்ஷ்மி ஜயவிக்ரமவின் கையெழுத்துடன், வட மாகாண கல்வியமைச்சர் க.சர்வேஸ்வரனுக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதில், தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுவிப்பதற்கான கோரிக்கைகள் சட்ட அணுகுமுறைகளின் அடிப்படையில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.