Thursday, July 5, 2018

How Lanka

விளையாட்டு முடிவுகளை சரியாக கணித்த ஆக்டோபஸ்ஸை கொன்று தின்ற முட்டாளன்

ஜப்பானை சேர்ந்த ரபியோ எனப் பெயரிடப்பட்ட ஆக்டோபஸ் உலக கோப்பை கால்பந்து 2018-ல் ஜப்பான் விளையாடிய லீக் போட்டிகள் அனைத்திலும் சரியாக கணித்தது.

ரபியோவை பிடித்த மீனவர் கிமியோ அபே, அந்த ஆக்டோபஸை ஞானதிருஷ்டிக்காக பயன்படுத்துவதை விட உணவுக்காக விற்று நிறைய பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளார்.

வைரலாவதன் மூலம் கிடைக்கும் புகழைவிட தனது வாழ்வாதாரமே முக்கியம் என கருதி ஆக்டோபஸை கொன்று உணவாக்கியுள்ளார்.

போலாந்துக்கு எதிராக ஜப்பான் தோல்வியடையும் என்பதையும் இந்த ஆக்டோபஸ் கணித்திருந்தது. ஜப்பான் - போலந்து போட்டி நடப்பதற்கு முன்னதாக ரபியோ சந்தைக்கு அனுப்பப்பட்டது .

உலககோப்பை போட்டிகளை கணித்த முதல் வினோத ஆக்டொபஸ் இதுவல்ல. 2010-ல் பால் எனும் ஒரு ஜெர்மனிய ஆக்டோபஸ் ஆறு உலக கோப்பை போட்டிகளில் சரியாக முடிவுகளை கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.