மாத்தளை பகுதியில சுகாதாரப் பரிசோதகர்கள் நடத்திய சுற்றிவளைப்பின்போது, 5,000 கிலோகிராம் நிறையுடைய நிறமூட்டப்பட்ட சிவப்பரிசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரிசி நிறமூட்டப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொது சுகாதாரப் பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் பசறை பகுதியில் நிறமூட்டப்பட்ட 3,000 கிலோகிராம் அரிசி கைப்பற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில், நிறமூட்டப்பட்ட அரிசி தொடர்பில் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புக்களை ஆரம்பிக்கவுள்ளதாக மகேந்திர பாலசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.