Friday, October 26, 2018

How Lanka

பிரதமரானார் மகிந்த - ரணிலிக்கு ஆப்பா

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பிரதமராக பதிவியேற்ற நிலையில், தென்னிலங்கையில் மக்கள் உச்ச கட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இந்நிலையில், தென்னிலங்கை மக்கள் வெடி வெடித்து தனது உச்ச கட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பிரதமராக பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் சற்று முன்னர் பிரதமராக பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளார். குறித்த அறிவிப்பினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின பொது செயலாளர் மகிந்த அமரவீர சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.


மேலும் விலகுவது குறித்த கடிதத்தை அவர் சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார்.