முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமகால அரசாங்கத்தின் பிரதமராக சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் திடீர் நடவடிக்கையாக இது அமைந்துள்ள நிலையில், ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக தெரிவு செய்யப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடு என அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சாட்டியுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் மங்கள சமரவீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.