Monday, December 17, 2018

How Lanka

140 ஓட்டங்களில் சுருண்டது இந்தியா - அவுஸ்ரேலியா அசத்தல் வெற்றி

பெர்த் டெஸ்டில் இந்தியாவை சுருட்டி 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியா-இந்தியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 326 ஓட்டங்களும், இந்தியா 283 ஓட்டங்களும் எடுத்தன.

அதனைத் தொடர்ந்து, 2வது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி 243 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கவாஜா 72 ஓட்டங்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் முகமது ஷமி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 287 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 55 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் கோஹ்லி 17 ஓட்டங்களிலேயே அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

ரஹானே 30 ஓட்டங்களில் வெளியேற 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில், இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 112 ஓட்டங்கள் எடுத்திருந்தது. விஹாரி 24 ஓட்டங்களுடனும், ரிஷாப் பண்ட் 9 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் வெற்றிக்கு மேலும் 175 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டத்தை இந்தியா தொடங்கியது. விஹாரி 28 ஓட்டங்களில் ஹாரிஸுடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.



அவரை தொடர்ந்து, சிறிது நேரம் தாக்குபிடித்த ரிஷாப் பண்ட் 30 ஓட்டங்களில் அவுட் ஆக, ஏனைய விக்கெட்டுகளும் சீட்டுக் கட்டைப் போல சரிந்தது. இறுதியில் இந்திய அணி 140 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்மூலம் 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க், லயன் தலா 3 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் மற்றும் ஹேசல்வுட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.