இந்தியா அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் பேட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த அவுஸ்திரேலிய அணி, 2-வது நாளில் 326 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் முன்னிலை உடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.
ஒட்டுமொத்தமாக,அவுஸ்திரேலிய அணி 175 ரன்கள் முன்னிலையில் உள்ளது. முன்னதாக 2-ம் நாள் ஆட்டம் முடிந்த பிறகு, மைதானத்தில் நகைச்சுவையான நிகழ்வு ஒன்று அரங்கேறி இருக்கிறது.
2-ம் நாள் ஆட்டம் குறித்து ஆஸ்திரேலிய வீரர் நாதன் லியோன் தொலைக்காட்சி நேரலையில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, தூரத்தில் இருந்து ஓடிவந்த சகவீரர் மிச்செல் ஸ்டார்க், அவரது கால் சட்டையைக் கழற்றி விட்டு ஓடிச்சென்றார். நேரலை என்பதால் இந்த நிகழ்வு அப்படியே ஒளிப்பரப்பானது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தொலைக்காட்சி விவாத குழுவில் இருந்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் கில்க்றிஸ்ட், “நல்ல வேளையாக நாதன் உள்ளாடை அணிந்திருந்தார்.” என்று நகைச்சுவையாக கூறினார்.
இந்த வீடியோ சமூல வலைதளங்களில் வைரலாகி வருகிறது