பெர்முடா முக்கோணத்தின் மத்தியில் தற்போது ஆபத்தான தீவு ஒன்று உருவாகியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பெர்முடா முக்கோணத்திற்கு அருகே செல்லும் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மர்மமான முறையில் மாயமாகின.
கடந்த 100 வருடங்களாக டஜன் கணக்கில் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மாயமாகின.
சராசரியாக, வருடத்திற்கு நான்கு விமானங்களும், 20 படகுகளும் காணாமல் போகும்.
கடலில் 440,000 மைல்கள் பரப்பளவைக் கொண்ட பெர்முடா முக்கோணத்தின் மத்தியில் சிறிய தீவு ஒன்று உருவாகியுள்ளது.
சிறிய மணல் திட்டு போன்று இருந்த இது, நாட்கள் செல்ல செல்ல பெரிதாகி ஒரு தீவு போன்று மாறியுள்ளது, இது பார்ப்பதற்கு பிறை வடிவில் உள்ளது.
இந்த தீவிற்கு Shelly என்று பெயரிடப்பட்டுள்ளது, இந்த புதிய தீவு ஒரு மைல் நீளமும், 400 அடி அகலமும் கொண்டது.
seashell சேகரிப்பாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் இந்த தீவுக்கு செல்வதில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் பெரிய அளவிலான திமிங்கலங்களின் ஆதிக்கம் இருப்பதால் உள்ளூர்வாசிகள் கடலுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த பெர்முடா முக்கோணத்தின் மத்தியில் சிறிய தீவு வேறு உருவாகியிருப்பதால் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.