Thursday, October 5, 2017

How Lanka

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கு 20ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்


ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் நேற்று நள்ளிரவு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்ய எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


மீள்பரிசீலனைக்கு பாடசாலை அதிபர் ஊடாக விண்ணப்பிக்க முடியும். இது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.