Thursday, October 5, 2017

How Lanka

களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன


மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன.

நேற்று மாலையும் இன்று காலையும் இரு மாணவர் குழுக்களிடையே மாதல் ஏற்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் ஊடகப் பணிப்பாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.


இந்த மோதலில் 6 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

மோதல் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச கூறியுள்ளார்.

அதற்கமைய மருத்துவ பீடத்தை தவிர்ந்த ஏனைய பீட மாணவர்களுக்கு மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழக வளாகத்திற்குள் பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளிலிருந்தும் அனைவரும் வெளியேற வேண்டும் என களனி பல்கலைக்கழகத்தின் ஊடகப் பணிப்பாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.