Sunday, January 21, 2018

How Lanka

இந்த வருடத்தின் முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி வெற்றியை இப்ப தான் பதிவு செய்தது இலங்கை அணி

இந்த வருடத்தின் முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி வெற்றியை இலங்கை கிரிக்கெட் அணி இன்று பதிவு செய்தது.

இலங்கை,சிம்பாப்வே மற்றும் பங்காளதேஷ் அணிகளுக்கு இடையிலான மும்முனை கிரிக்கட் தொடரின் 4 ஆவது போட்டி டாக்காவில் இன்று இடம்பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 198 ஓட்டங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.


Brendan Taylor அதிகபட்சமாக 58 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் திசர பெரேரா 4 விக்கெட்டுக்களையும் நுவன் பிரதீப் 3 விக்கெட்டுக்களையும் லக் ஷான 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

199 எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி 44.5 ஓவர்களில் 5 விககெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

குசல் பெரேரா 49 ஓட்டங்களை பெற்றார்.

ஆட்டநாயகனாக திஸர பெரேரா தெரிவானார்.