வங்கதேசத்தின் டாக்காவில் இன்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை முதலில் தெரிவு செய்தது.
தொடக்க வீரர்களாக குசல் மெண்டீசும், திமுத் திலகரத்னேவும் களமிறங்கினார்கள்.
கருணரத்னே 3 ஓட்டங்களில் அவுட்டான நிலையில், அடுத்த வந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் அவுட்டாகி வெளியேறினார்கள்.
65.3 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 222 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக குசல் மென்டீஸ் 68 ஓட்டங்களும் ரோஷப் சில்வா 56 ஓட்டங்களும் எடுத்தனர்.
வங்கதேச அணி சார்பில் அப்துர் ரசாக் மற்றும் டைஜுல் இஸ்லாம் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை வங்கதேசம் ஆட தொடங்கியது.
ஆரம்பத்திலேயே மூன்று விக்கெட்களை அந்த அணி பறிகொடுத்தது. தற்போதைய நிலவரப்படி 10 ஓவர்களில் வங்கதேசம் 3 விக்கெட்கள் இழப்புக்கு 20 ஓட்டங்கள் எடுத்துள்ளது.