கண்டி மற்றும் அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்களின்போது பாதுகாப்புத்துறை அசமந்தப் போக்குடன் செயற்பட்டுள்ளது என அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில் தோன்றியுள்ள அசாதாரண நிலை தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
பாதுகாப்புத்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர். சிங்கள சகோதரர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவெறுப்பு பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறப்போவதை உளவுத்துறை முன்கூட்டியே அறிந்து, அதனை தடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.