Monday, April 23, 2018

How Lanka

சீனாவிடம் வாங்கிய கடன் சுமையால் டொலருக்கான ரூபா பெறுமதியில் தொடர்ந்து வீழ்ச்சி நிலை

இலங்கையில் நேற்று திங்கட்கிழமையும் டொலருக்கான ரூபா பெறுமதியில் வீழ்ச்சிஏற்பட்டிருந்ததாக அமெரிக்க இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்றைய நாள் நிறைவின் போது டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி156ரூபா 90 சதமாக இருந்தது. எனினும், கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் 65 சத வீழ்ச்சியாக இதுபதிவு செய்யப்பட்டுள்ளது.

இறக்குமதியாளர்களின் கேள்விக்குறைவே இதற்கான காரணம் என்று சந்தைத் தரப்புக்கள்சுட்டிக்காட்டியுள்ளன. எனினும், சீனாவின் கடும் கடன்சுமையில் உள்ள இலங்கையில் டொலருக்கான ரூபா பெறுமதியில்வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததாக அமெரிக்க இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் சீனாவின் அடித்தள கட்டமைப்புக்கான நிதிகள் தொடர்பில் தமது கருத்தை அந்தஇணையத்தளம் வெளியிட்டுள்ளது.

அத்துடன், சீனாவின் பாரிய முதலீட்டிலான திட்ட கடன்கள் மற்றும் வெளிநாட்டு நாணயஒதுக்கத்தின் வீழ்ச்சி என்ற இரண்டு பாரிய பொருளாதார பிரச்சினைகள் இலங்கையில்உள்ளதாக அந்த இணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

சைலீஸ்குமார் என்ற ஈரோ ஏசியாவின் தென்னாசிய பொருளாதார ஆய்வாளரை சுட்டிக்காட்டியேமேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.