இந்த ஆண்டிற்கான சிறப்பு விருதுகள் பட்டியலில் சென்னை அணியின் தலைவர் டோனிக்கு இன்னவேடிவ் திங்கிற்கான விருது கொடுக்கப்பட்டது.
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற 11-வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.
கிண்ணத்தை கைப்பற்றியுள்ள சென்னை அணி நாளை சென்னை செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருது அளிக்கப்பட்டது

- எமர்ஜிங் பிளேயர் மற்றும் ஸ்டைலிஷ் பிளேயர் விருது ஆகியவற்றை டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ரிஷப் பந்த் கைப்பற்றினார்.
- 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் எடுத்த பஞ்சாப் அணியின் ஆண்ட்ரு டைக்கு பர்பிள் கேப் வழங்கப்பட்டது.
- 17 போட்டிகளில் 735 ரன்கள் எடுத்த ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ஆரஞ்சு கேப் வழங்கப்பட்டது.
- சூப்பர் ஸ்டிரைக் வீரர் மற்றும் ஆதிக்கம் செலுத்திய வீரர் ஆகிய விருதுகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரேனுக்கும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் டிரெண்ட் போல்டுக்கு சிறந்த கேட்ச் பிடித்த வீரர் என்ற விருதும் வழங்கப்பட்டது.
- சென்னை அணியின் தலைவரான டோனிக்கு இன்னவேடிவ் திங்கிங் வீரருக்கான விருது வழங்கப்பட்டது.